18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த சோபியா என்ற மாணவிக்கும், அந்த மாணவி இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்த பாஜக தலைவர் தமிழிசைக்கும் இயல்பாக தொடங்கியது விவாதம். பறக்கும் விமானத்திலேயே சோபியாவுடன் சண்டையில் குதித்தார் தமிழிசை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தை விட்டு இறங்கியும் கூட தமிழிசை ஓயவில்லை. சோபியாவுடன் கடும் வாக்குவாதம் புரிந்தார். காவல்துறையினர் சமாதானத்திற்கு பின்னால், சோபியா மீது புகார் கொடுத்தார் தமிழிசை. அதன் பேரில் காவல் துறையினர் சோபியாவைக் கைது செய்தனர். கைது செய்த அவரை அறங்கூற்றுவர் முன்பு அணியப்படுத்தினர். மாணவி சோபியாவை சிறையில் அடைக்க அறங்கூற்றுவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சோபியாவை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனால் தற்போது திடீரென மாணவி சோபியாவை காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் சோபியா விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கீச்சுவில், ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! 'பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக' என்று அதிரடியாக கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



