Show all

காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக

காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக பேரணி நடத்துகிறது.

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்று திமுக பேரணி நடத்துகிறது.

பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வாராக்கி மற்றும் எழிலரசு என்கிற இரண்டு நபர்கள் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்தனர்.

இந்த வழக்கு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு அறங்கூற்றுவர்கள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆசா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் மற்றும் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை வெடித்ததாகவும், திமுக நடத்தும் பேரணியிலும் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

அப்போது திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடுள்ளதாக அரசு தரப்பில் அறங்கூற்றுவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறங்கூற்றுவர்கள், மக்களாட்சியில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று குறிப்பிட்டனர். அதேசமயம் எந்த வன்முறையும் இருக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திமுக பேரணிக்கு அனுமதி அளித்த உயர்அறங்கூற்றுமன்றம், வன்முறை நடந்திடக்கூடாது என்று திமுகவிற்கும், பேரணியை முழுமையாக தொழிற்நுட்பப் படப்பிடிப்புக்கருவி மூலம் காணொளிகாட்சி எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,373.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.