நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் மக்கள் நடுவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாகக் கருதப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் மக்கள் நடுவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாகக் கருதப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து முனை போட்டியாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலினும், அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமியும், முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தனர். சீமான், (நாம் தமிழர் கட்சி) தினகரன் (அமமுக) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோரும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. திமுக-காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் என மொத்தமாக 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளன. இந்த இரண்டு தமிழகத்தின் தலைமைத்துவமான கட்சிகள் தவிர, தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சமக, ஐஜேகே என மொத்தமாக 12 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் நடுவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ரிபப்ளிக் தொலைக்காட்சி, சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தெரிவிக்கும் பட்டியல் சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தெரிவிக்கும் பட்டியல் இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின் முடிவு தெரிவிக்கும் பட்டியல் மொத்தத்தில் இந்த முறை திமுக தனிப்பெரும்பான்மைக்கான மிக அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றே அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி: 160-170
அதிமுக கூட்டணி - 58-68
அமமுக கூட்டணி - 4-6
ம.நீ.ம கூட்டணி - 0-2
திமுக கூட்டணி: 160-172
அதிமுக கூட்டணி - 58-70
அமமுக கூட்டணி - 0-4
ம.நீ.ம கூட்டணி - 0
மற்றவை - 0
திமுக கூட்டணி: 175-195
அதிமுக கூட்டணி - 38-54
அமமுக கூட்டணி - 1-2
ம.நீ.ம கூட்டணி - 0-2
மற்றவை – 0
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.