திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 வார்டுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார். 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 பகுதிகளுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் திமுக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார். அவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக சென்று வழங்கப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



