தேமுதிக சார்பாக மகளிர் அணி மாநாடு இன்று ராயப்பேட்டையில்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மகளிர் அணி தலைவர் பிரேமலதா
விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், கூட்டணி
குறித்து எந்த கட்சியுடனும் நான் பேரம் பேசவில்லை. பத்திரிக்கைகள்தான் பேசியும், எழுதியும்
வந்தன. எனக்கு யாரும் பாடம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை.
பத்திரிக்கை நண்பர்களை தரக்குறைவாக சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். கூட்டணி குறித்து எனக்கு எந்த குழப்பமும் கிடையாது.
நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். என்னை கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும்
எனது நன்றியைத்தான் தெரிவித்துக் கொண்டிருந்தேன். கூட்டணி குறித்து சொல்லவில்லை. வருகின்ற தேர்தலில் விஜயகாந்த் தனியாக சந்திக்கப்
போகிறேன் என்று தெளிவாகச் சொல்கிறேன். நேர்காணலின்போது இதையேதான் நிர்வாகிகளும் சொன்னார்கள். காஞ்சிபுரம் மாநாட்டில் நான் கிங்காக இருக்க வேண்டுமா?
அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்டபோது, நீங்கள் கிங்காக
இருக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அதனால்தான், விஜயகாந்த் இந்த தேர்தலில் தனியாகத்தான்
போட்டியிடப் போகிறேன் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்கிறேன். எனக்கு எந்த பயமும்
கிடையாது என்று கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



