10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை முகிலவாக்கம், பேரூர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தமிழில் பேசி உணவு பரிமாறும் இயந்திர மனிதர்களை பணி அமர்த்தி இருக்கின்றார்கள். இது தமிழில் பேசி உணவு பரிமாறுகின்றது. இந்த இயந்திர மனிதர்கள் வெள்ளை மற்றும் நீல நிற உடை அணிந்துள்ளனன. இந்த உணவகத்தில் ஏழு இயந்திர மனிதர்கள் இருக்கின்றன. ஒரு இயந்திர மனிதனின் விலை ரூ.5 லட்சமாகும். தேவை கேட்டு பரிமாறுகின்றன. இந்த இயந்திர மனிதர்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தேவை கேட்டு, சூடான உணவுகளைக் கொண்டு வந்து பரிமாறுகின்றன. இந்த இயந்திர மனிதர்கள் தமிழில் பேசி பணியாற்றுவதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மகி;ச்சியாகியுள்ளனர். மேலும், இயந்திர மனிதர்களுடன் அவர்கள் தம்படம் எடுத்து செல்கின்றனர். உணவகத்தின் உள் நுழைந்தவுடன் ஒரு பெண் இயந்திர மனுசி வரவேற்பார். இந்த உணவகத்தில் அனைத்து பணிகளையும் இயந்திர மனிதர்களே செய்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,071.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.