11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை பிரியா ஆனந்திடம், அரசியல்வாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத் காதலைச் சொன்ன காணொளி தீயாகி வருகிறது. ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எல்.கே.ஜி. படம் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் நிகழ்வை கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று பிரபல நடிகர்களின் படங்களைப் போல் காலை 5 மணிக்கே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. படத்தின் விளம்பரத்திற்காக நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நாஞ்சில் சம்பத் ப்ரியா ஆனந்திடம் காதலைச் சொன்ன காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகி வருகின்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.