10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாமக, அதிமுக அமைத்துள்ள கூட்டணியில் தற்போது நடுவண் அரசில் ஆட்சியில் உள்ள பாஜகவும் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பாமகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான பாலு அளித்த பேட்டியில்: எங்களுடைய பத்து அம்ச கோரிக்கைகளில் முதன்மையானது ஏழு தமிழர் விடுதலை. இதுகுறித்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். கண்டிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவார்கள். அடுத்த ஏழு நாட்களில் விடுதலை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். பாமக இது போன்ற அதிரடிகளால், தமிழினத்திற்கு ஆதரவாக பலமுறை சாதித்திருக்கிறது. இம்முறையும் சாதிக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சி பாராட்;டிற்குரியது. சரி பாமக நிற்கும் தொகுதிகளில் பாமகவிற்கு வாக்களிப்போம். ஆனால் அரசியல் வணிகர்களான அதிமுக, பாஜகவை வாக்களிக்காமல், வீட்டிற்கு அனுப்ப இது ஒரு சிறப்பான காரணமே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,071.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.