நிலக்கோட்டையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விழாவில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் குழந்தைகள் குரல், தொண்டு நிறுவனம் சார்பில் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மீட்டெடுக்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் கருமலைபாண்டியன் தலைமை வகித்தார். குழந்தைகள் குரல், நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை விழவை தொடக்கி வைத்தார். இதில் நிலக்கோட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பாண்டி, சொட்டாங்கல், பம்பரம், கிட்டிபில்லை, கோழிக்குண்டு, போன்ற விளையாட்டுகளை பெண்கள் ஆர்வத்துடன் விளையாடினர். அதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவுக்கு குழந்தைகள் குரல், திட்ட இயக்குநர் சார்லஸ் தலைமை வகித்தார். குழந்தைகள் குரல், அறங்காவலர் வனிதாமணி, வத்தலக்குண்டு சுழற் சங்க செயலாளர் மாதவன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் தன்னார்வளர்கள், சமுதாய நலக்குழு உறுப்பினர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திட்ட மேலாளர் ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், சிவநாகஜோதி, ஜெனிபர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அண்ணாதுரை கூறுகையில் இன்று தொலைக்காட்சி, செல்போசி, மடிக்கணினி வருகையால் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, நொண்டி, சொட்டாங்கல், பம்பரம், கிட்டிபில்லை, கோழிக்குண்டு, போன்ற விளையாட்டுகளை மக்கள் விளையாடுவது குறைந்து வருகிறது. அவற்றை நினைவுபடுத்தும் விதமாகவும் மீட்டெடுக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இது போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்தி நமது பாரம்பரியத்தை காக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,229.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



