Show all

நலம் பெற்று வருவதாகக் கீச்சு வெளியிட்டுள்ளார்! நடிகர் சூர்யாவுக்கு கொரோனா

முந்தா நாள் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நடிகர் சூர்யாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்தது.

26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர்.

அவர்களைப் பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்றிருந்தார் சூர்யா. முந்தா நாள் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.

பரிசோதனையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சூர்யா வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், ‘கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் கட்டாயம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என்று கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது திரையுலகிலும், கொண்டாடிகள் நடுவேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் தங்கள்  வாழ்த்துக்களை  வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர்கள் விசால், பிருதிவிராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜசேகர், நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிசேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.