சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். 25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் திரைப்படத்தின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்னவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: அண்மையில் தான் அருண் விஜய், ஆர்னவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் இப்போது தமிழ் திரைப்படத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அருண் விஜய் போன்று விஜய குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முதன்மைத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய நிகழ்வுகள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது. குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க உதகையில் படமாக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.