கொரோனா முடிவுக்கு காத்திருக்கும் படங்களில் கமலோடு கதைத்தலைவியாக கீர்த்தி சுரேஷ் இணையும், பாகம் 2 திகில் படமும் ஒன்றாகும். 06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் இரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா முடிந்த பின் மீண்டும் தொடங்கவுள்ளது. தற்போது கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளாராம் கீர்த்தி சுரேஷ். கவுதம் மேனன் இயக்கத்தில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வேட்டையாடு விளையாடு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் கமலுடன் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி என பலர் நடித்திருந்தனர். ஊரடங்கு முடிந்த பின் கமல்ஹாசன் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் படங்களை முடித்துவிட்டு வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



