தமிழக மக்கள் போன தலைமுறையில் அம்மைக்கு கொடுத்து வந்த மரியாதையை கொரோனாவுக்கும் தந்திருக்கின்றார்கள். பெரும்பாலான வீடுகளில் காலை எழுந்தவுடனேயே வாயிலைத் தூய்மைப்படுத்தி, மஞ்சள்பொடி கலந்த சாணத்தை தெளிக்கிறார்கள். வேப்பிலை கொண்டு காப்பும் கட்டுகிறார்கள். அச்சத்தோடு தமிழர்கள் இதுவரை கெரோனா சமூகப்பரவலை தடுத்தே வருகிறார்கள். 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் சமூகப்பரவல் இல்லாத நிலையில் மேலும் 3 பேருக்கு அயல் நிலை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சமூகப்பரவல் இல்லாத நிலையைத் தக்கவைக்க வெளிநாடு, வெளிமாநில மக்கள் குறித்து தமிழக மக்கள் கவனமாக இருங்கள். அவர்கள் கொரோனா பரப்பும் ஊடகமாக அமைந்திட வாய்ப்பு இருக்கிறது. கவனம். கவனம். கவனம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 8 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கீச்சுப் பக்கத்தில் கூறுகையில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த 24 அகவை இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக உள்ளது. அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த கணவன் மனைவி இரண்டு பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



