Show all

தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்கள் 3நாட்களில் நியமனம்! முதல்வர் உத்தரவு

கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரி முதல்வர் வெளியிட்ட உத்தரவில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் 3 நாளில் பணியில் சேர வேண்டும். புதிதாக 200 சடுதிவண்டிகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக நலங்குத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர்  ஆலோசனை நடத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.