19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் 25 விழுக்காடு மக்கள், நிருவாகம், அதிகாரிகள், பொருளாதாரம் ஆகியன- அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக- காவல்துறை, சிறைத்துறை, வழக்கறிஞர்கள், நடுவர்கள், தவறிழைத்ததாக வழங்கப் பட்டத் தீர்ப்புக்காக சிறைபட்டிருக்கும் மக்களில் ஒரு சாரர் என நாட்டின் 25 விழுக்காட்டினர் அர்பணிக்கப் பட்டிருக்கிற நிலையில்- தமிழகம் தனக்கு வழங்கப் பட்ட காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பை போராடித்தான் பெறவேண்டும் என்றால் மேற்காண்ட அர்பணிப்புகளுக்கு என்ன பொருள்! அமுல் படுத்தாத நடுவண் அரசும், தீர்ப்பை மதிக்காத கருநாடக அரசும் அப்படி என்ன உசத்தி! நாட்டின் பல்வேறு அறங்கூற்று மன்றங்களின் தீர்ப்புகளை ஏற்று சிறைபட்டிருப்பவர்கள் அப்படி என்ன இழிவானவர்கள்! சட்டம் பாரபட்சமானதா! வேடிக்கையான நடைமுறைகளின் மீது தமிழ் மக்களின் கேள்விகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,715.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



