Show all

ஆளும் முதல்வர் அண்ணாச்சி! ஸ்டெர்லைட் கொடுத்த நூறு கோடி என்னாச்சி

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவு நீரால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஆலையில், வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, அதை மூட, தற்போது எடப்பாடி மேற்கொண்டிருக்கிற நாடகம் போலவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆலை நிர்வாகத்துக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, ஸ்டெர்லைட் ஆலையை நடத்திக் கொள்ள உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த அபராத தொகையை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின்  பொறுப்பில், வங்கியில், வைப்பு செய்து, அதில் வரும் வட்டி தொகையை, மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மாசுபாட்டை குறைப்பதற்கும், பயன்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

அண்மையில் தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் மற்றும் 13 பேரின் உயிரிழப்புக்குப் பின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை செலுத்திய அபராத தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து, 141 கோடி ரூபாயில், தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏழு கோடி ரூபாய் வரை நகரின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளதும், மீத தொகை பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.