16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான இராசராச சோழன், உலகம் முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தியாவிலும் குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் இராசராசசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் இராசேந்திர சோழனும் கடல்கடந்து போர் தொடுத்து சென்றுள்ளார். இவர்கள் பல நாடுகளை பிடித்த போது, அவர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் சிலைகள் நிறுவப்பட்டன. இன்னும் பல பகுதிகளில் இந்த சிலைகள் அப்படியே இருக்கிறது. தமிழக தொல்லியல் துறை பல சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறது. இந்த சிலைகளின் மதிப்பு பல கோடிகளை தாண்டும். தற்போது குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து இராசராச சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. பொன்மானிக்கவேல் தலைமையிலான தனிப்படை காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இராசராச சோழன் சிலையுடன் உலகமகாதேவி சிலையும் மீட்கப் பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ 150 கோடி என பொன்மானிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். 1000 ஆண்டுகள் பழமையானது என்பதால் இன்னும் அதிக விலை கூட இருக்க வாய்ப்புள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,803.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



