Show all

கீழடி தொல்லியல் அலுவலர் அமர்நாத், திடீர் மாற்றம்

கீழடி அகழ்வாய்வின் மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்க இருந்த நிலையில், அதில் மிகவும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, தமிழரின் பாரம்பரியச் சிறப்புகளை வெளிக்கொண்டுவந்த மேற்பார்வை முதுநிலைத் தொல்லியல் அலுவலரான அமர்நாத், திடீரென்று கீழடித் திட்டத்திலிருந்து அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

     கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வின் காரணமாக, தமிழரின் பாரம்பரியம் எவ்வளவு உயர்வானது என்பதை உலகம் அறிந்து வியப்புற்றது.  அதனாலேயே, அந்த ஆய்வுத் திட்டத்தைத் தொடர, மோடி பாஜக நடுவண் அரசு நிதி அளிக்காமல் இழுத்தடித்தது. அங்கு கண்டுபிடித்த அரிய பொருள்களை வெளி  மாநிலங்களுக்குக் கொண்டு சென்றார்கள். அது சம்பந்தமான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

     இந்த அகழாய்வின் மேற்பார்வைத் தொல்லியல் அலுவலராக இருந்தவர், அமர்நாத். இவர், மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், இந்த ஆய்வில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டார். மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடக்க இருந்த நிலையில், அமர்நாத் அதிரடியாக அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மோடி பாஜக நடுவண் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     இந்தப் பொறுப்புக்கு இனி வருபவர், அமர்நாத் அளவுக்கு ஆர்வமாகவும் தமிழர் பண்பாட்டில் ஈடுபாடுள்ளவராகவும் இருப்பாரா என்பது சந்தேகமே. இதன் பின்னணியில் மோடி பாஜக நடுவண் அரசின் ஹிந்துத்துவா அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.