தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவால் விதிக்கப்பட்ட நாற்பது நாட்கள் ஊரடங்கு, இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் 2 கிழமைகளுக்கு ஊரடங்கை நடுவண் அரசு நீட்டித்துள்ளது. பாதிப்புகளை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து, ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:- கட்டாயத்தேவைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் குழாய் பொருத்துதல், மின்பணியாளர், குளிர்பதனப் கருவிகள் பணிசெய்பவர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்களுக்கு அனுமதி
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிப்பமாக மட்டும் வழங்கலாம்
கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே தங்கி கட்டுமான தொழில்களை மேற்கொள்ளலாம்
அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான, சாலை பணிகளை மேற்கொள்ளலாம்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 25விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம்
வண்;பொருள், பைஞ்சுதை, கட்டுமான பொருட்கள், தூய்மைப்பாட்டுப் பொருட்கள், மின்னியல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள் இயங்கலாம்
செல்பேசி, கணிப்பொறி, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், மின் மோட்டர், கண் கண்ணாடி, விற்பனைக்கு அனுமதி
பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகளுக்கு அனுமதி (காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை)
வீட்டு வேலை பணியாளர்கள் உரிய அனுமதி பெற்று பணபுரிய அனுமதி
முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதியில்லை
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



