15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தை பெருமையாகக் கருதி, அந்த வகையான பள்ளிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. கல்வி வாரியம் மறுதேர்வு வைக்கப் போவதாக அடவடியில் ஈடுபட்டது. இதுதொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், மறுதேர்வு நடத்தப்படவேண்டியது இல்லை என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 1 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதும் 16.38 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கே இந்தக் குளறுபடி. இந்த இலட்சணத்தில் இவர்களிடம் நீட்தேர்வை, நடுவண் அரசு ஒப்படைத்து நடந்த அலங்கோலங்களை மறக்க முடியுமா; மன்னிக்க முடியுமா? தமிழ்நாடு அரசு கல்வித் திட்டத்தில் பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். மேலும் தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர். பிசிறில்லாமல் தேர்வும் தேர்வு முடிவுகளும் நடந்தன; வெளியாகின. நடுவண் அரசு பாடத்திட்டம் நடத்துகிற பொறுப்பாளர்களே தமிழக அரசு பாடத்திட்டப் பொறுப்பாளர்களுக்கு நிருவாகத் திறமையில் குறைந்தவர்கள் என்கிற போது அவர்களால் கட்டிஅமைக்கப் பட்ட பாடத்திட்டம் மட்டும் எப்படி தமிழக பாடத் திட்டத்தை விட சிறப்பாக அமைந்து விட முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



