நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் அளித்திருந்த பதில் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது. 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக திண்டுக்கல்லின் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். அதனையடுத்து அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு ஹிந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும். அவரை மக்கள் விரும்பும் எந்த வகையான தலைவராகவும் நான் கருதவில்லை. அவர் முதலில் எந்த கட்சி என கேள்வி எழுப்பிய முதல்வர், இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி படுத்தியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.