தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுக இந்த கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை முழுமையாக ஏற்கும். திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கிராமப்புற-ஏழை-பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவும் நிச்சயம் நிறைவேறும் இது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



