கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளன. அதனால் கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமாக உள்ளது. 20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே 63மட்டுமாக உள்ளது. ஆனால் சென்னையில் 203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்றைய கொரோனா தொற்றின் எண்ணிக்கை 266 ஆகும். கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 266 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,255 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1458 ஆக அதிகரித்துள்ளது. முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப் படுகின்றது. ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும். ஆனால், நீண்ட காலம் இந்த கொரோனா நுண்ணுயிரி நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையையும் நாம் மாற்றி அமைத்தாக வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை என்பதும், சென்னை தவிர்த்த தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 63 மட்டுமே என்பது ஆறுதல். இந்த நிலையில் பொது நலங்குத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: (!) தற்போது 35 அரசு ஆய்வகங்கள், 14 தனியார் ஆய்வகங்கள் என 49 ஆய்வகங்கள் உள்ளன.
(!) டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 1,611 பேர்.
(!) தற்போது தனிமையில் இருப்பவர்கள் 37 ஆயிரத்து 206 பேர்.
(!) அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 40 பேர்.
(!) மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,50,107.
(!) மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,40,716.
(!) இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 10,584.
(!) மொத்தம் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 3,023.
(!) இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 266.
(!) தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 187 பேர். பெண்கள் 79 பேர்.
(!) மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023.
(!) இன்று குணமாகி வீடு திரும்பியவர்கள் 38 பேர். மொத்தம் குணமாகி வீடு திரும்பியவர்கள் 1,379 பேர்.
(!) இன்று கொரோனா நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
(!) சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதே எண்ணிக்கையில் 4 அதிகரித்து 146 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் அதே எண்ணிக்கையில் 114 ஆக உள்ளது. திண்டுக்கல் 81, ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளன. புதிதாக சென்னையில் 203, கோவை 4, திருவள்ளூரில் 2, அரியலூர் 2, கள்ளக்குறிச்சி 6, விழுப்புரம் 33, கடலூர் 9, திருவண்ணாமலை 1, மதுரை 2, , செங்கல்பட்டில் 1, தென்காசி, கன்னியாகுமரி 1, என மொத்தம் 12 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.
(!) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 அகவைக்கு உட்பட்ட குழந்தைகள் 170 பேர். இதில் ஆண் குழந்தைகள் 88 பேர். பெண் குழந்தைகள் 82 பேர்.
(!) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 12. ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 24. கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே. இவ்வாறு பொது நலங்குத்துறை தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



