20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்ட நிறுவனமான நடுவண் அரசே, உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையாக காவிரி மேலாண்மை வாரியம் உரிய காலத்தை நயவஞ்சகமாக காவிரி மேலாண்மை அமைக்காமலே கடத்தி விட்டது. அதன் பொருட்டு மோடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடியின் மோசடித் தனத்தைக் கண்டித்து, விக்கிரமராசா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இதன்படி, தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோயம்பேடு மார்கெட் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் பரபரப்பாக இயங்கும் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகாசியில் 900 க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் காய்கறி, பழ அங்காடிகள் மூடப்பட்டுள்ளன. பூக்கள் வாடிவிடும் என்பதால் பூ அங்காடி மட்டும் உள்ளது. பூக்கள் இருப்பு உள்ளவரை பூ அங்காடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேகோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் விற்பனை இருக்காது எனக்கூறப்பட்டுள்ளது. மோசடி மோடிக்கு எதிரான போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,746.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



