Show all

பாலாஜியின் இந்த உதார் உண்மையிலேயே பாஜவுக்கா! இல்லை தமிழக மக்களுக்கா? 10 அமைச்சர் பதவி கேட்குமாம் அதிமுக

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாஜவுக்கு நாங்கள் ஆதரவு தர வேண்டுமென்றால், மத்தியில் 10 அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு தர வேண்டும், சும்மா ஆதரவு தர நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் முந்தாநாள் இரவு நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: 

முதல்வர் எடப்பாடி சாதகம் இப்போது வலுவாக இருக்கு. சனி அங்கே உச்சத்துல இருக்க, குரு பார்வை எங்க பக்கம் இருக்கும்போது, எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. இனி அதிமுக ஆதரவு தந்த கட்சிதான், மத்தியில் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

செயலலிதா பெருந்தன்மையுடன் ஆதரவு கொடுத்தது போல், நாங்கள் வெறும் ஆதரவை தர மாட்டோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் வெல்வோம்.  வென்று மத்தியில் அமையும் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்றால், 10 நடுவண் அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு தர வேண்டும். அப்போதுதான் ஆதரவு வழங்குவோம். சும்மா கொடுக்க நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல. அதிலும் விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு நடுவண் அமைச்சர் பதவியை உறுதியாக கேட்பேன்.

நாம யாருக்கோ ஆதரவு கொடுத்து, யாருக்கோ ஓட்டு போட்டு, அவங்க ஆட்சிக்கு வந்ததும், நீ அங்கே ஒரு காலை வைப்பே. இங்கே ஒரு காலை வைப்பே. ஒரே பேச்சுதான். எங்களை நம்பு. நாங்க ஆதரவு கொடுக்கிறோம். முன்வாசல்ல எங்களை பார்ப்பே. பின் வாசல்ல அவங்களை பார்ப்பே. இந்த வேலையை எல்லாம் எங்கக்கிட்டே வச்சுக்காதே. இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட கிடைக்காதே! அப்புறம் யாருக்குக் கொடுப்பார்கள் அவர்கள் பத்து அமைச்சர் பதவி: இது மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,900.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.