Show all

தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதும் அவலம்!

தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள்.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுவோர்கள் அதிகமா? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் அதிகமா? என்று ஒரு ஆய்வை முன்னெடுத்தால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர்கள் தாம் அதிகம் என்கிற முடிவு வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. 

எதற்கு தமிழை இப்படி ஆங்கிலத்தில் எழுதி தலைவலியை உருவாக்க வேண்டும்? தமிழையும் இழிவுபடுத்த வேண்டும்? எழுதாமல் விட்டு விடலாமே. தமிழ் வரலாற்றில் தமிழுக்கு இப்படி ஒரு அவலம் தேவைதானா? தயவு கூர்ந்து இந்த வகை படைப்பாளிகள் தமிழில் எழுதுங்கள் அல்லது உங்கள் தலைவலி வேண்டவே வேண்டாம். 

நீங்கள் ADIKALAI என்று எழுதினால் நான் ஆடிகாலை என்றும் புரிந்து கொள்ளலாம், அதிகாலை என்றும் புரிந்து கொள்ளலாம். ஆடிகளை என்றும் புரிந்து கொள்ளலாம். அடிகாளை என்றும் புரிந்து கொள்ளலாம். தமிழைப் போல அ+ம்+மா அம்மா என்று எழுத்தைக் கூட்டினால் சொல் வராதே. AMMA என்றுதானே எழுத வேண்டும். அம்மா, அம்ம, ஆம்ம, என்றெல்லாம் படிக்கலாமே. 

தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள். உலகத்தில் எழுத்தைக் கூட்டினால் சொல் வருகிற ஒரே மொழி தமிழ் மட்டுந்தாம். உயிர் பனிரெண்டு, மெய் பதினெட்டு உயிர்மெய் 216 என எல்லா ஓசைகளையும் எழுத்துக்களில் அடக்கிய மாபெரும் மொழி தமிழ் மட்டுந்தாம். 

எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையாக எழுத்துக்களை அமைத்துக் கொண்ட அனைத்து மொழிகளும் தமிழைக் கடன்கொண்டவைகள் என்பது வரலாறு. தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.