Show all

சந்தானத்தின் நானூறாவது படம் திரைக்கு வர காத்திருக்கிறது! கொரோனாதான் தடை

நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதைத்தலைவனாக நடித்துள்ள படம் பிஸ்கோத். இப்படத்தில் சந்தானத்துக்கு கதைத்தலைவியாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். மற்றும் சுவாதி முப்பலா, சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: “இது சந்தானத்தின் 400-வது படம். மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வரலாற்றுக் காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். வரலாற்று காலத்து ஆடைகள், பல்லக்கு, வாள், கத்தி போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. படத்தில் 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும். 

இதற்காக 500 நடிகர், நடிகைகள் மன்னர் கால உடை அணிந்து நடித்துள்ளனர். பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கொண்டாடிகளைச் சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.