Show all

சல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை மிரட்டிப் பணிய வைத்த பி.ஜே.பி! திருமாவளவன்

சல்லிக்கட்டு விவகாரத்தில் நடுவண் மோடி அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டிருக்கிறது. நடுவண் அரசு மிரட்டியும், நிர்பந்தித்துமே மாநில அரசை பணிய வைத்துள்ளது: என திருமாவளவன் தெரிவித்தார்.

     விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

     குடியரசு நாளுக்கான ஒத்திகை நடத்த, மெரினா கடற்கரைச் சாலை தேவை என்பதற்காகவே, திட்டமிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டத்தை கலைத்துள்ளது காவல்துறை. முதலில் மாணவர்கள், சல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தெடங்கியபோது, அரசு அவர்களை அனுமதித்து விட்டு, அரசு விரும்பாத போது விரட்டி அடித்து உள்ளது. மீண்டும் மாணவர்கள் எந்த காரணத்துக்காகவும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காகாவே இந்த அடக்குமுறை தாக்குதல் திட்டமிட்டு நடந்துள்ளது.

     இந்த வன்முறைச் சம்பவத்திற்கு உரிய முறையில் நீதி விசாரணை நடத்தக் கோரி மக்கள் கூட்டியக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாணவர் போராட்டத்திற்கு பிறகு சென்னையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.