மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற
போராட்டத்தைச் சமூக விரோதிகள் திசை மாற்றியதாகவும் காவிரி முல்லைபெரியாறு சிக்கல் தொடர்பாகவும்
முழக்கமிடப்பட்டதாகவும் சட்டமன்றத்தில் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சல்லிக்கட்டு
நடத்தக் கோரி சனவரி 16 முதல் அலங்காநல்லூர் தொடங்கி சென்னை மெரீனா கடற்கரை வரை ஏழுநாட்களுக்கு
மேலாக போராட்டம் நடைபெற்றது. சனவரி
23ஆம் (போராட்ட உணர்வுகளின் கருப்புநாள்) தேதியன்று சல்லிக்கட்டு தடைக்கு எதிரான சட்டம்
மாலையில் சட்டமன்றத்தில் இயற்றப் படவிருக்கிற நிலையில், அந்தச்
சட்டத்திற்காக, தொடர்ந்து ஏழு நாட்களாக இரவு பகலாக பனியிலும் வெயிலிலும் உலகே பாராட்டும்
வகையில் வரலாறு காணாத அறப்போராட்டம் நிகழ்த்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது வலுக்கட்டாயமாக
காவல்துறையின் வன்முறை ஏவி விடப்பட்டது ஏன் என்பதற்கு- பன்னீர் செல்வம் கட்டிய சப்பைக்கட்டின் நேர்த்தியே
நேர்த்தி. இரண்டு
நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டமன்றம் கூடியது. இந்த நிலையில் மாணவர்கள்,
இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு- சென்னை வன்முறை குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்,
மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற
போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைபெரியாறு பிரச்சினை பற்றியெல்லாம்
முழக்கமிட்டனர். சல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்துடன் போராட்டத்தில்
சிலர் ஈடுபட்டனர். சல்லிக்கட்டு
நடத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
விளக்கம் (ம்! ஆச! ஆச! உலகமே ஒங்கள பாராட்டும் நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்கனுமாக்கும்!
நீங்களே சல்லிக்கட்ட நடத்துங்களேனு ஊடகங்கள வைச்சு கேட்கவுட்டு பேர் சம்பாதிச்சுக்கலாமுனு
பாத்தா அது புடிக்காதா ஒங்களுக்கு!) அளிக்கப்பட்டது. அமைதியான
போராட்டத்தில் கடைசி இரண்டு நாட்கள் சமூக விரோத கும்பல் ஊடுருவி திசை திருப்பியது.
இதனையடுத்தே போராட்டக்காரர்கள் கடற்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மெரீனா கடற்கரை
செல்லும் சாலைகள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. தடுப்பு வேலியை தாண்டியவர்கள் மீது
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. (காவல்துறையினர்
யார் மீதும் கற்களை வீசாமல் பரிதாபமாக குனிந்து நின்று கொண்டே இருந்தார்கள் இதனால்)
60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இதன் பின்னரே தடியடி நடத்தப்பட்டது என்று
சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



