விவசாயிகள்
தற்கொலையைத் தடுக்க நடுவண் மற்றும்
மாநில அரசுகள் என்ன திட்டம்
வைத்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடுவண் மாநில
அரசுகளிடம் என்ன திட்டம் உள்ளது
என்று உச்சநீதிமன்றம்; கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள்
தற்கொலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள்
தற்கொலையைத் தடுக்க மத்திய மாநில
அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் விவசாயிகளின்
தற்கொலையை தடுக்க நடுவண் மற்றும்
மாநில அரசுகளிடம் எந்தத் திட்டமும் இல்லாதது
ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இயற்கை பேரிடர்கள் மற்றும்
வறட்சியின் போது விவசாயிகளைக் காக்க
அரசு என்ன திட்டம் வைத்துள்ளது.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடுவண், மாநில
அரசுகள் கொள்கை வகுக்காதது ஏன்
என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. மேலும்,
விவசாயிகளின் தற்கொலை உணர்வுபூர்மானது என்று
கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டது குறித்த
விவரங்களை 4 வாரத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும்
என்று உத்தரவிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



