கொடுமை! நடுவண் பாஜக அரசின் சரக்குசேவை வரி பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் திருப்பூர், கோவையில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் எந்த அசிங்கத்திற்கும் அணியமாகி விட்டார்கள். 15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு அரசின் மது விற்பனையே நமக்கு நெஞ்சில் முள்ளாக நெருடிக் கொண்டிருக்கிறது. மதுவால் அன்றாட கூலித் தொழிலாளியிலிருந்து பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை டாஸ்மாக்கிற்கு கொடுத்துவிட்டு தாங்களும் அழிந்து குடும்பத்தையும் அழித்துவிடுகின்றனர். நல்ல பெற்றோருக்கு தன் பிள்ளைகளை சான்றோர்களாக முன்னெடுப்பதில் பெரும் அறைகூவலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடுவண் பாஜக அரசின் சரக்குசேவை வரி பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் திருப்பூர், கோவையில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் பல தங்கள் தொழிலாளர்களை சம்பளம் கொடுக்கமுடியாமல் வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்குவதால் தொழிலாளர்களும் வேறு வேலைக்குச் செல்கின்றனர். இதனால் போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் பல நிறுவனங்கள் சிரமத்தைச் சந்திக்கின்றன. இந்நிலையில் தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்று மதிய நேரத்தில் ஒரு கட்டிங் மதுவும், இரவில் ஒரு குவாட்டர் பாட்டில் மதுவும் தருவதாக அறிவித்து சுவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களாக வேலையாட்களுக்காக காத்திருந்ததாகவும், ஆனால் இச்சுவரொட்டி விளம்பரம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ஆட்கள் வந்து வேலைக்கு சேர்ந்துவிட்டதாக உரிமையாளர் பேசும் கேளொலி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



