Show all

மீண்டும் சிம்பு! இரசிகர்கள் மகிழ்ச்சியில்

நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆம் நீண்ட நாட்களாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார் சிம்பு.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆம் நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்தார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மகா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்பு ஒரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மகா கதைத்தலைவிக்கு முதன்மைத்துவம் அளிக்கும் படமாக தயாராகி வருகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் நடிக்க உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.