Show all

தற்போதும் திரையிலும், இணையத்திலும்! தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா

தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா, தற்போதும் ஒளிரும் வகையாக மூன்று படங்கள், ஓர் இணையத் தொடர் என்று வேலையாய் இருக்கிறார்.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரதிராசா நடித்து இயக்கியுள்ள படம், மீண்டும் ஒரு மரியாதை விரைவில் திரைக்கு வருகிறது. ‘என் இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை, நவம்பர் 8, எலினா ஆகிய 3 படங்கள் தயாராகின்றன. இதில் மீண்டும் ஒரு மரியாதை படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர உள்ளது. இதில் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோ.மல்லூரி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் கிராமத்து எழுத்தாளராக வருகிறேன்’ என்று பேசுகிறார் பாரதிராசா.

எழுத்தாளர், தன் முதுமையில், மகனுடன் வசிக்க லண்டன் செல்கிறார். அங்கு தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்குமான பயணம் தான் கதை. தற்கொலை முடிவு தவறானது என்பதையும், உலகம் அழகானது என்பதையும் படம் உணர்த்தும். முதுமைத் தளத்தில் இருக்கும் பாரதிராசா நல்ல கதையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார். உறுதியாக படம் இயல்பாக வரும். நவம்பர் 8 படத்தில் விதார்த் நடிக்கிறார். பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் 3 படங்களில் நடித்து வருகிறார் பாரதிராசா. பாரதிராசா தன் வாழ்க்கையின் பெரிய பதிவாகக் கருதும், குற்ற பரம்பரையை இணையத் தொடராக இயக்குகிறார். 24 பகுதிகளாக இது வெளிவரும் என்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.