Show all

மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்! அண்ணாவுக்கு வலது புறமாக தம்பி கருணாநிதிக்கு படுக்கை

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் இந்த ஆய்வில் பங்கேற்றார்.

அதில் அண்ணா சமாதிக்கு வலதுபுறம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து இந்தப் பகுதி, அதிரடிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதையடுத்து உடலடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.