23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வராக 6863 நாட்கள் பணியாற்றி சாதனைப் படைத்ததலைவர் கருணாநிதி அவர்கள். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239 நாட்கள் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். 3634 நாட்களும், காமராஜர் 3432 நாட்களும் முதல்வராக இருந்துள்ளனர். காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பொறுப்பில் இருந்ததை விட கூடுதலாக ஒரு மடங்கு அதிகமான நாளில் கருணாநிதி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



