Show all

கருணாநிதி மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான  குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

திருக்குவளையில் பிறந்த கருணாநிதி 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5முறை முதல்வராகவும் இருந்துள்ளார். எழுத்து, இலக்கியம், வசனம், திரைக்கதை, அரசியல் என பன்முக தன்மைகளை கொண்டவர் கருணாநிதி.

இவர் தமிழகத்துக்கு செய்த சாதனைகள் ஏராளம். இந்நிலையில் இவர் காலமான நிலையில் இவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான  குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

கருணாநிதி அவர்கள்.

அந்தத் தலைமை அமைச்சர்கள்:

1. ஜவஹர்லால் நேரு

2. லால் பகதூர் சாஸ்திரி

3. இந்திரா காந்தி

4. மொரார்ஜி தேசாய்

5. சரண் சிங்

6. ராஜீவ் காந்தி

7. வி.பி. சிங்

8. சந்திரசேகர்

9. நரசிம்ம ராவ்

10. தேவகௌடா

11. ஐ.கே. குஜரால்

12. அடல் பிகாரி வாஜ்பாய்

13. மன்மோகன் சிங்

14. நரேந்திர மோடி

ஆகிய 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு அரசியலில் வலம் வந்தவர் கருணாநிதி அவர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.