Show all

அனிதாவின் அண்ணன் வேண்டுகோள்: அரசின் நிவாரணம் பெரிதல்ல; நீட் தேர்வில் விலக்கு வேண்டும்

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் தனக்குரிய இடம் பறிக்கப் பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

     இதுகுறித்து, அனிதா குடும்பத்தினரிடம் அரியலூர் ஆட்சியர் லட்சுமிபிரியா நேற்று பேச்சு நடத்தினார். அரசு நிவாரணத்தை பெறுவது குறித்து கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக அவர்கள் கூறினர்.

     தமிழக அரசின் நிவாரணம் பெரிதல்ல, நீட் தேர்வுக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என-

உயிரிழந்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தன் உயிரான தங்கையை இழந்த போதிலும், தமிழ் மாணவர்கள் மீதான சமூக அக்கறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.