தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



