நம்ம வீட்டுப்பிள்ளை, குடும்பப் படம் என்பதால் தமிழ்நாடு முழுவதிலும் இந்த படம் வெற்றி அடையும் என திரையரங்க உரிமையாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறனாய்வில், நல்லபெயர் கிடைத்தும் வசூலில் அது எதிரொலிக்கவில்லையே என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர். 13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் முன்னணி கதைத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் எப்போதும் நல்ல வசூலை கொடுத்து வந்தன. ஆனால், வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் சிவகார்த்திகேயன். இந்த சூழலில் தான் சன் பிக்சர்ஸ் பதாகையில் பாண்டியராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன். பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கம் அபார வெற்றி என்பதால், அதே மாதிரி குடும்பப் படமாக உருவானது நம்ம வீட்டு பிள்ளை. இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வேலைக்காரன் படம் முதல் நாளில் ரூ.90 லட்சம் வசூல் செய்தது. சீமராஜா முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்தது. மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படுதோல்வி என்றாலும், முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூல் செய்தது. ஆனால் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அதைவிட குறைவாக தான் வசூலித்துள்ளது. முதல் நாள் நிலவரப்படி நம்ம வீட்டு பிள்ளை சென்னையில் மட்டும் ரூ.58 லட்சம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் போன்றதொரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியீடு செய்தும், அவர்களால் முதல் நாளில் பெரிய தொகையை எடுக்க முடியவில்லை. இருப்பினும் அடுத்து வரும் நாட்களில் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்புகின்றனர். சூர்யாவின் காப்பான் படமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு பிள்ளை வசூல் பாதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அவர்கள். இருப்பினும் குடும்பப் படம் என்பதால் தமிழ்நாடு முழுவதிலும் இந்த படம் வெற்றி அடையும் என திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறனாய்வில், நல்லபெயர் கிடைத்தும் வசூலில் அது எதிரொலிக்கவில்லையே என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர். நமது இந்தச் செய்தியைப் படித்து விட்டு திரைப்படம் பார்க்கச் செல்கின்றவர்கள், இல்லையே.. படம் அருமையாக வந்திருக்கிறதே என்பார்கள். இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்புதான் கொஞ்சம் ஊசலாட்டத்தைத் தருகிறது. சிவகார்த்திகேயன் தங்கையும், தலைவியும் அசத்தவே முயன்றிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,291.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



