நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். 13,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போதுள்ள இயல்புக்குப் புறம்பான சூழல் காரணமாக- கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி கொடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் இயங்கலை வாயிலாக கல்வி கற்றனர். படத்திட்டங்களையும் அரசு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.