Show all

நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள்! கொரோனா அறிகுறி ஐயம் இருந்தால் மருத்துவமனை செல்லுங்கள்

காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் நடுவண் அரசு ஊரடங்கை நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் பீலா ராஜேஷ் கீச்சுவில் விடுத்துள்ள வேண்டுகோளில் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் தயவுகூர்ந்து வீட்டில் இருந்துகொண்டே சுயமருத்துவம் செய்யாதீர்கள், தொலைபேசியில் மருத்துவர்களை தொடர்புகொண்டுகூட அறிவுரை கேட்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.