31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறை குறித்தும், அறங்கூற்றுத்துறை குறித்தும் மோசமாக விமர்சித்த எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மெய்யப்புரத்தில்; விநாயகர் சிலை சம்பந்தமாக காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக விவாதித்தது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா காவல்துறை குறித்தும் அறங்கூற்றுமன்றம் குறித்தும் மிக மோசமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காவல்துறையினர் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் மோசமான சொற்களை பயன்படுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,912.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



