Show all

ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் கைது! 8 வழி சாலைக்கு எதிராக காணொளி வெளியிட்டதாக

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலை குறித்து வெளியிட்ட காணொளி, போராட்டத்தை தூண்டும் வகைக்கானது என்று காணொளி பதிவு வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலைக்கு எதிராக பரவலாகப் போராட்டம் நடந்துவருகிறது. இதற்கிடையே, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஸ், சில நாட்களுக்கு முன்பு காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். 'அதில் சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலைக்கு எதிராக, மக்களை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் காணொளி பதிவை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அந்த காணொளி பதிவை பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்தக் காணொளி பதிவை பதிவேற்றம் செய்த நபரை கைது செய்ய, மாவட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ், ஆய்வாளர் சண்முகசுந்தரத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவல்ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரணை நடத்தி, அந்த காணொளிவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் என்பது கண்டறிந்தனர். 

அந்த காணொளிவில், 8 வழி சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். 'நாங்க 16 பேரை கூட கொல்ல தயங்க மாட்டோம். இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது   கொல்லப்பட வேண்டியவர்கள் தான், முன்னின்று இந்த பணி செய்யும் அரசு ஊழியர்கள்' என்று வசீகரன் பேசியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நேற்று முந்தாநாள் சென்னை சென்றனர். அங்கு மதுரவாயலில் வசித்து வரும் வசீகரனை, அவரது வீட்டில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்தனர். பிற்பகல் அவரை காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து  வசீகரனை, வாழப்பாடி குற்றவியல் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்சந்தோஷம் முன்னிலையில் அணியப்படுத்தி,  15 நாள் அறங்கூற்றுமன்ற காவலில் வைத்தனர். தொடர்ந்து, அவர் சேலம் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார்.  வசீகரன் மீது 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.