Show all

மருத்துவமனையில் அனுமதி! அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சேலம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் அரசு விழாவிற்கு வந்த கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. காமராஜ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் இன்று சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் செல்லும்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது. காரின் டயர் வெடித்ததால், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.