15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் முதன்மையான கனவுகளில் ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது. இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார். பனிரென்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக இருந்த சமயத்தில், அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து பிராமண சமூகத்தினர், பலர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, இதைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சைவ மற்றும் வைணவ முறைப்படி தமிழகம் முழுக்க அர்ச்சகர் பயிற்சி மையங்களை அமைத்தது. இதில்; 206 பேர் பயிற்சி பெற்றார்கள். ஆனால் இவர்களுக்கு பத்து ஆண்டுகளாக பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது. கடைசியாக கடுமையான அகமவிதிகளின் படி அவர்கள் பணியில் சேர அனுமதி அளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் தற்போது பிராமணர் அல்லாத மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் 205 பேருக்கு பணியாணை எப்போது வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல ஆண்டு போராட்டங்களுக்கு பின்பு திமுகவின் இந்த கனவு திட்டம் கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போது நடைமுறைக்கு வந்துள்ளது. பிராமணரல்லாத அர்ச்சகர் நியமனம்! கலைஞர் ஐயா, உங்கள் கனவுத் திட்டமொன்று நனவாகியிருக்கிறது விரைவில் நலம் பெற்று வாருங்கள் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



