20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்விகி, சோமாட்டோ, புட் பாண்டா, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள், செல்பேசி செயலி மூலம், கட்டளை பெறப்பட்டு உணவுகளை, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு எடுத்து வந்து கொடுக்கும், சேவையை செய்து வருகின்றன. இதற்காக, பல்வேறு உணவகங்களுடன், இந்த நிறுவனங்கள் வியாபார ஒப்பந்தம் செய்துள்ளன. இயங்கலை மூலம் கட்டளை கொடுக்கப்படும் உணவுகள், தரமற்று இருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம், தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆன்லைன் உணவு வர்த்தகத்தை முறைப்படுத்தும் பணியை, ஆணையம் தொடங்கியது. அதில், இயங்கலை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் உணவகங்களில், 30-40 விழுக்காட்டு உணவகங்கள், முறையான உரிமம் பெறாமல் நடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, உரிமம் பெறாத உணவகங்கள், உரிமம் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கெடுவை முடித்து கொண்டு, அரசு உரிமம் பெறாத உணவகங்களை, இரண்டு கிழமைகளுக்குள் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி, இயங்கலை உணவு சேவை நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



