Show all

ஒரு சிறுவன் படுகொலை! நான்கு சிறுவர்கள் கொலைக் குற்றவாளிகள்: காரணம் போதை பழக்கம்

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜேஷ் 8-ஆம் வகுப்பு படித்துவந்தான். கடந்த 01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (14.01.2018) வெளியே சென்ற ராஜேஷ் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை பெருமாள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராஜேஷின் பெற்றோரும், உறவினர்களும் தாங்களும் பல இடங்களில் ராஜேஷை தேடியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜேஷை கொலை செய்ததாக கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

சரணடைந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்தபோது, அங்கு ராஜேஷ் வந்திருக்கிறார். அப்போது, கஞ்சா புகைப்பதை காவல்துறையிடம் கூறிவிடுவேன் என மிரட்டி 4 பேரிடமும் ராஜேஷ் பணம் கேட்டதாக அந்த சிறுவர்கள் தெரிவித்தனர். 

இதனால் 4 பேரும் ஆத்திரத்தில் ராஜேஷை தாக்கியபோது அவர் உயிரிழந்த நிலையில், உடலை சுடுகாட்டிலேயே புதைத்ததாக  3 சிறுவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

அரசே மது விற்பனையை கைவிட முடியாமல் தடுமாறும் போது, அரசு எவ்வழி மக்கள் அவ்வழி வேறு என்ன சொல்ல.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.