கடந்த கிழமையில் தொடர்வண்டியில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளையும் இரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது நடுவண் அரசு. 09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாத இறுதிவரை அனைத்து பயணிகள் தொடர்வண்டி சேவைகளையும் ரத்து செய்து, இந்திய இருப்புப்பாதை நிருவாகம் அறிவித்துள்ளது. பயணிகளின் வருகை குறைவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட தொடர்வண்டிச் சேவைகள் முன்பு நிறுத்தப்பட்டன. அதேபோல குளிர்பதன பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிப் போர்வை போன்றவை வழங்கப்படாது என்று ஏற்கெனவே நிருவாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த கிழமையில் தொடர்வண்டியில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாத இறுதிவரை அனைத்து பயணிகள் தொடர்வண்டி சேவைகளையும் ரத்து செய்து, முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இருப்புப்பாதை நிருவாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிதாகத் தடுக்கப்படும் என்கிற நிலையில், இந்த நடவடிக்கைக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



