Show all

அருவருப்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள ஹெச்.ராஜாசர்மா மீது கள்ளக்குறிச்சியில் 55வழக்குகள் பதிவு

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அருவருப்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள, பாஜகவின் தேசியச் செயலாளர் என்று சொல்லப் படுகிற, ஹெச்.ராஜாசர்மா தொடர்ந்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துவருவதாக கள்ளக்குறிச்சி அறங்கூற்றுமன்றத்தில் தனித்தனியாக 55 வழக்குகள் பதிகை செய்யப்பட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.கருணாநிதி குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும் அவதூறான கருத்தை தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிராகப் பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து, ராஜாசர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால் ஹெச்.ராஜாசர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்துவரும் ஹெச்.ராஜாசர்மா மீது நேற்று கள்ளக்குறிச்சி அறங்கூற்றுத்துறை நடுவர் அறங்கூற்றுமன்றத்தில் 55 வழக்குகள் தனித்தனியாக பதிகை செய்யப்பட்டுள்ளன.

திமுக செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜே.செல்வநாயகம் தலைமையிலான 55 வழக்கறிஞர்கள் ஹெச்.ராஜாசர்மா மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த வழக்குகளை பதிகை செய்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் ஹெச்.ராஜாசர்மா சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்குகளின் விசாரணை விரைவில் அறங்கூற்றுமன்றத்தில் வரவுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,769.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.