Show all

கெரோனாவே சிரிக்கும் அவலம்! கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் முனைப்பு காட்ட, மெத்தனத்தில் ஒன்றியஅரசு

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தமிழக அரசு கடந்த 10 நாட்களாக அன்றாடம்  வேகமாக கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறது.

18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் அன்றாடம் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் கூட, ஒன்றிய பாஜக அரசு போதிய தடுப்பூசிகளை ஒதுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு மிகவும் குறைவாகவே கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தமிழக அரசு கடந்த 10 நாட்களாக அன்றாடம்  வேகமாக கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறது.

மாவட்டம் வாரியாக, சிறிய சிறிய முகாம்கள் நடத்தி, தெரு தெருவாக கொண்டு சென்று மக்களுக்கு எளிதாக கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

அதிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மூலம் உள்ளூர் முகாம் நடத்தி அன்றாடம் ஒரு பகுதி, கிராமம், பொது இடம் என்று மொத்தமாக பிரித்து கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். கிராமங்களுக்கே கொரோனா தடுப்பூசி கொண்டு சொல்லப்படுவதால் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் இருந்த கொரோனா தடுப்பூசி சேதாரம் 6 விழுக்காட்டில் இருந்து அனுமதிக்கப்பட்ட 1விழுக்காடாகக் குறைந்துள்ளது. மன்னார்குடி போன்ற தொகுதிகளில் கொரோனா தடுப்பூசி சேதாரம் சுழியமாக உள்ளது. இப்படி தமிழகம் கொரோனா தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டி வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பூசி போட தயாராக இருந்தும், ஒன்றிய பாஜக அரசு போதிய கொரோனா தடுப்பூசி அனுப்பாமல் தாமதம் செய்து வருகிறது. கடந்த மாதத்திற்கு வர வேண்டிய தடவைகள் கணக்கு 20.43 லட்சம், அதில் தமிழகத்திற்கு 18.67 லட்சம் தடவைகள் வந்துள்ளன. 1.74 தடவைகள் இன்னும் தமிழகத்திற்கு வர வேண்டும். 

கடந்த மாதத்திற்கு வரவேண்டிய கொரோனா தடுப்பூசிகளே இன்னும் வராத நிலையில் நடப்பு மாதத்திற்கான கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்றும் தெரியவில்லை. நடப்பு மாதம் 40.58 லட்சம் தடவைமருந்துகள் தமிழகம் வர வேண்டும். 

இந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் இரண்டு மூன்று நாட்கள்  தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என்று நலங்குத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.